இந்திய கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் தோனி, இவர் கிரிக்கெட்டில் காலடி எடுத்த வைத்த பிறகு தான் இந்திய அணி வெற்றிகளை குவித்தது.
இந்த நிலையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் ப்ளே ஆப் சுற்றிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னேறியுள்ளது.
இதை தொடர்ந்து தோனி சமீபத்தில் இன்னும் ஒரு வருடத்தில் என்னை உட்பட எல்லோர் உடல் தகுதியையும் ஆராய வேண்டும், அப்படி ஆராய்ந்து அதன் பிறகு தான் தொடர்வோமா என்று சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் தோனி ஐபிஎல் போட்டில் இருந்து இந்த வருடத்துடன் வெளியேறவுள்ளார் என்று கூறப்படுகின்றது.
மேலும், சுரேஷ் ரைனாவும் இந்த ஐபிஎல் கோப்பையை தோனிக்காகவே வாங்கி கொடுக்கவேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.