யுவன் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளார், ஒரு நடிகருக்க் இணையாக அவருக்கு ரசிகர்கள் பலம் உள்ளது உங்களுக்கே தெரியும்.
அந்த வகையில் யுவன் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 120 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.
ஆனால், அவர் இதுவரை ஒரு தேசிய விருது கூட வாங்கியது இல்லை, ஆனால், ரசிகர்கள் பலரும் அவருக்கு எப்போதே தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்.
7ஜி, பருத்தீவிரன், ஆரண்யகாண்டம் ஆகிய படங்களுக்கு அவருக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
அவர்கள் நினைத்தது போலவே யுவனின் பல படங்கள் தேசிய விருது பட்டியலில் போட்டி போட்டுள்ளது, இதில் பருத்திவீரன் கடைசி ரவுண்ட் வரை சென்று தேசிய விருதை தவறவிட்டது.
அதை விட தங்கமீன்கள் படத்திற்கு யுவனுக்கு தான் தேசிய விருது என பலரும் காத்திருந்த நிலையில் 1 ஓட்டு வித்தியாசத்தில் அவருக்கான விருது கிடைக்காமல் போனது.
இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்தில் இருந்தனர், தற்போது கடந்த வருடம் வெளிவந்த தரமணி தேசிய விருது பட்டியலில் உள்ளது.
இதற்காவது யுவனுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர், நாமும் யுவனுக்கு கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.