திருப்பதி இல்லை சென்னையில் தான் திருமணம்! நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண பத்திரிக்கை இதோ

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நானும் ரௌடி தான் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது காதலில் விழுந்து தற்போது வரை காதலித்து வருகின்றனர். தற்போது அவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திருப்பதியில் திருமணம் நடப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் உண்மையில் திருமணம் அங்கு நடைபெறவில்லையாம். சென்னை அருகில் மகாபலிபுரத்தில் தான் திருமணம் நடக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணத்தின் அழைப்பிதழ் வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.