தல அஜித் படத்தை கலாய்த்த பிரபல அரசியல் கட்சி தலைவர்

நடிகர் அஜித் எந்த பிரச்சனைக்கும் வரமாட்டார். தன் பட நிகழ்ச்சிகளுக்கு வருவதை கூட அப்போதே நிறுத்திவிட்டார். ஆனால் அவரது ரசிகர்கள் பலம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில் தற்போது தல அஜித் நடித்து ஹிட் ஆன அட்டகாசம் படத்தின் ஆட்டோ கண்ணாடி காமெடி காட்சியை பிரபல அரசியல் கட்சி தலைவர் கலாய்த்துள்ளார். பாமக தலைவர் ராமதாஸ் தான் ட்விட்டரில் அப்படி பேசியுள்ளார்.

“கண்ணாடியை திருப்பி வைத்தால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகும் என்ற அஜித் பட நகைச்சுவைக்கு அடுத்தப்படியாக, ஆகச் சிறந்த மூட நம்பிக்கை என்பது சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்பது தான்!” என அவர் கூறியுள்ளார்.