ஸ்ரீதேவி குடும்பத்திற்கே ஷாக் கொடுத்த இளைய மகள் குஷி

ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்தது தான். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

தாயை இழந்த இருவரும் மிகவும் சோகத்தில் உள்ளனர், அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியாமல் போனிகபூர் வருத்தப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் ஜான்வி தடக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரீ ஆகின்றார், அம்மாவை போலவே பெரிய நடிகையாக வேண்டும் என்பதே அவரின் விருப்பமாம்.

ஆனால், ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். முன்பு குண்டாக இருந்த அவர் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாகிவிட்டார்.

மேலும் குஷிக்கு நடிப்பதில் துளிகூட ஆர்வம் இல்லையாம், படித்து முடித்து விட்டு மாடலிங் செய்வாராம், பேஷன் டிசைனில் தான் ஆர்வமாம்.

இதை கேட்ட ஸ்ரீதேவி குடும்பமே அம்மாவை போல் நடிகையாக வருவார் என்று பார்த்தால் இப்படி சொல்லிவிட்டாரே என்று அதிர்ச்சியாகியுள்ளது.

Khushi Kapoor