வீரம், பைரவா படங்களை எடுத்த பிரபல தயாரிப்பாளர் திடீர் மரணம்

திரைப்பட தயாரிப்பாளர் B.வெங்கட்ராமரெட்டி இன்று மதியம் 1 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.

இவர் ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘உழைப்பாளி’, தாமிரபரணி , படிக்காதவன், வேங்கை , வீரம் , பைரவா ஆகிய பல படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது விஜய் சேதுபதி நடித்துவரும் சங்கத்தமிழன் படத்தையும் தயாரித்து வந்தார். உடல்நலக்குறைவால் அவர் இன்று காலமானார்.

இவர் இறுதி சடங்கு சென்னை நெசப்பாக்கத்தில் நாளை காலை 7 .30 முதல் 9 மணி வரை நடைபெறவுள்ளது.