ஐபில் வருடம் தோறும் பிரமாண்டமாக நடந்து வருகின்றது, இதில் இரண்டு முறை கப் அடித்து சென்னைக்கு பெருமை சேர்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சூதாட்ட புகாரில் சிக்கி இரண்டு வருடம் பேன் செய்யப்பட்டது.
தற்போது பேனை நீக்கிய பிறகு இரண்டு வருடங்களுக்கு பிறகு சென்னை இந்த வருடம் களத்தில் இறங்குகின்றது.
CSK அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் முரளி விஜய் தமிழகத்தை சார்ந்தவர், இவர் ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடி தான் இந்திய அணிக்கே தேர்வானார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் தன் பிறந்தநாளை ஒரு குழந்தைகள் இல்லத்தில் கொண்டாடினார், அப்போது அவர் பிரபல வானொலிக்கு பேட்டியும் கொடுத்தார்.
அப்போது அவரிடம் ‘உங்களுக்கு பிடித்த நடிகர், விஜய்யா? அஜித்தா? என்று கேட்டனர், அதற்கு அவர் ‘என் பேவரட் எப்போது ஜோதிகா தான்.
அவர்கள் யாருடன் நடித்தாலும் அந்த படத்தை பார்த்துவிடுவேன்’ என்று கூறியுள்ளார்.