விசுவாசம் பட எடிட்டருக்கு தோனி மீது அப்படி என்ன கோபம்? – இப்படி பேசிவிட்டாரே

சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் பைனல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டி முடிந்த பிறகு தோனி அவரது மகள் ஸிவாவுடன் விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் இந்த வீடியோ பற்றி விசுவாசம் பட எடிட்டர் ஆன்டனி எல் ரூபன் கோபமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “இந்த மாதிரி வீடியோ ஷேர் செய்பவர்களை பார்த்தால் கடுப்பாக உள்ளது. நானும் தோனி ரசிகன் தான், ஆனால் நான் என் குழந்தையுடன் விளையாடுவதை எந்த மீடியாவும் கவர் செய்வதில்லையே” என அவர் கூறியுள்ளார்.