இந்தியாவிலே ரகுமான் கூட இல்லை, யுவன் மட்டுமே இந்த விருதை வாங்கியுள்ளார்

யுவன் ஷங்கர் ராஜா தென்னிந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர், இவர் கையில் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.

சமீபத்தில் இவர் இசையில் பியார் ப்ரேம காதல் படத்தின் சிங்கிள் ட்ராக் நேற்று வெளிவந்து ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து தர்போது இப்படத்தின அடுத்த சிங்கிள் வெளியிடுவதில் யுவன் செம்ம பிஸியாகவுள்ளார், இந்த நிலையில் யுவன் பல விருதுகளை வாங்கியுள்ளார்.

ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய விருதான தேசிய விருதை அவர் ஒருமுறை கூட வென்றது இல்லை, அதுக்குறித்து நாம் ஏறகனவே ஒரு வீடியோவில் பார்த்தோம்.

அதே நேரத்தில் உலக அளவில் ரகுமான் கூட வாங்காத ஒரு விருதை யுவன் இசைக்கா வாங்கியுள்ளார், ஆம், யுவன் ராம் படத்திற்காக Cyprus International Film Festival-ல் யுவன் சிறந்த இசையமைப்பாளர் என்ற விருதை வாங்கியுள்ளார்.

இதற்கு முன் இந்த விருதை எந்த ஒரு இசையமைப்பாளரும் இந்தியாவில் இருந்து வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.