Euro 2020 கால்பந்து போட்டியில் ‘வலிமை அப்டேட்’ கேட்ட அஜித் ரசிகர்கள்! வைரல் போட்டோ

valimai

தல அஜித்தின் வலிமை படத்தின் ஷுட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கொரோனா சூழ்நிலை காரணமாக அது வெளியிடப்படவில்லை. அதனால் ரசிகர்கள் அதிகம் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது நிலைமை சரியாகி படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் தான் இருக்கிறது. இன்னும் ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. அதை வெளிநாட்டில் படமாக்க முதலில் இயக்குனர் ஹெச். வினோத் திட்டமிட்டு இருந்தார், ஆனால் தற்போது அதை ஹைதராபாத்தில் படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வலிமை திருவிழா என டுவிட்டரில் அவர்கள் டிரென்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் தற்போது நடந்து வரும் EURO 2020 கால்பந்து தொடரில் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டு பதாகையை காட்டி இருக்கிறார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே கிரிக்கெட் போட்டிகளிலும் இப்படி வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் பேனர் காட்டியது குறிப்பிடத்தக்கது.

Valimai update