அஜித் படம் எப்போது வந்தாலும் திரையரங்கிற்கு திருவிழா தான், அவர் படங்கள் எப்போது வரும் என பல திரையரங்கள் காத்திருக்கின்றது.
அஜித்தின் படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, அந்த அளவிற்கு பிரமாண்ட ரசிகர்கள் கூட்டம் கொண்டவர்.
அந்த வகையில் அஜித் பல நல்ல படங்களில் நடிக்க மறுத்து அஜித் மற்ற நடிகர்கள் நடித்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
இதில் குறிப்பாக சூர்யாவிற்கு தான் அதிக லாபம், ஏனெனில் காக்க காக்க, நந்தா, கஜினி, நேருக்கு நேர் என அவர் வாழ்க்கையை புரட்டி போட்ட படங்கள் அனைத்து அஜித்திற்கு வந்தது தான்.
அந்த வகையில் விஜய் நடித்த இரண்டு மெகா ஹிட் படங்களும் அஜித்திற்கு வந்தது தானாம், ஆனால், அதில் அஜித் நடிக்க மறுக்க விஜய் நடித்துள்ளார்.
ஆம், கில்லி, கத்தி இந்த இரண்டு படங்களுமே முதலில் அஜித் தான் நடிக்க விருந்தது, ஆனா, இந்த இரண்டுமே பேச்சு வார்த்தையிலேயே நின்றது.
அதை தொடர்ந்து விஜய் நடித்து மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது, இந்த படத்தை அஜித் தவறவிட்டது
இது மட்டுமின்றி விக்ரமின் தூள் படமும் அஜித் நடிக்கவிருந்தது தான், அதையும் அஜித் தவறவிட்டார்.
மேலும் ஆர்யாவின் நான் கடவுள் படத்திற்காக அஜித் முடியெல்லாம் வளர்ந்து உடம்பை இழைத்து பின் படப்பிடிப்பு சென்று நிறுத்தப்பட்ட கதையெல்லாம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.
அதோடு கே.வி.ஆனந்த் கோ படமும் முதலில் அஜித்தை மனதில் வைத்து தான் எழுதினாராம், ஆனால், தொடக்கத்திலேயே அஜித் அதில் நடிக்க மறுத்துள்ளார்.
இப்படி பல சூப்பர் ஹிட் படங்களில் அஜித் நடிக்க மறுத்தது அவருடைய ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.