அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா? அஜித்தா? வெளிவந்த உண்மைத்தகவல்

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே நம்பர் 1 நடிகர் என்றால் ரஜினிகாந்த் தான். ரஜினி படம் வருகின்றது என்றாலே இந்தியா முழுவதும் ஒருவகை எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

இவர் படத்தின் சாதனையை இவரே முறியடித்தால் மட்டுமே உண்டு, தற்போது கூட எல்லோரின் கவனமும் காலா மீது தான் உள்ளது, என்றும் அவர் தான் சூப்பர் ஸ்டார்.

அதே நேரத்தில் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் யார் என்பது நீண்ட நாள் கேள்விக்குறியாக உள்ளது, விஜய், அஜித் ரசிகர்கள் தங்கள் நாயகர்களை அடுத்த ரஜினி என முன் வைப்பார்கள்.

ஆனால், முன்னணி பத்திரிகையாளர்கள் இதுக்குறித்து தெரிவிக்கையில், ரஜினிக்கு பிறகு வசூல் மன்னன் என்றால் அது விஜய் தான்.

ஏனெனில் விஜய் படங்களுக்கு எப்போதும் பேமிலி ஆடியன்ஸ் இருக்கும், அஜித் படங்களுக்கு முதல் மூன்று நாள் இளைஞர்கள் கூட்டம் படையெடுக்கும்.

படம் சரியில்லை என்றால் அப்படியே கூட்டம் நின்றுவிடும், அதே நேரத்தில் விஜய் படங்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் கூட்டம் வருவதால் இன்னும் சில நாட்கள் அதிகம் ஓடும் என்று தெரிவித்துள்ளனர்.