விசுவாசம் படத்தில் அஜித் கதாபாத்திரம் – தல ரசிகர்களுக்கு புதிய சர்ப்ரைஸ் தகவல்

விசுவாசம் படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷூட்டிங் சென்ற திங்கட்கிழமை துவங்கி நடந்துவருகிறது.

முதல் நாளிலேயே கிராமத்து பின்னணியில் ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என தற்போது தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இது பற்றி படக்குழு உறுதியான தகவல் எதுவும் வெளியிடவில்லை.