அருவா படத்தில் சூர்யா ஜோடியாக முன்னணி ஹீரோயின்! அதிகாரப்பூர்வ தகவல்

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்கள் கொடுத்த சூர்யா-ஹரி கூட்டணி மீண்டும் ஆறாவது முறையாக இணைகிறது. அருவா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

சூர்யாவின் 39வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஹீரோயின் பற்றிய தகவல் இதுவரை வராமல் இருந்த நிலையில் தற்போது நடிகை ராசி கண்ணா சூர்யா ஜோடியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

ட்விட்டரில் அவரே இதை அறிவித்துள்ளார். ரசிகர் ஒருவரது கேள்விக்கு பதில் கூறிய ராசி கண்ணா “நான் அடுத்து அரண்மனை 3 மற்றும் சூர்யா-ஹரி இணையும் படத்தில் நடிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

பல மாதங்களாக அப்டேட் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது இந்த தகவலை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

ஏப்ரல் மாதம் அருவா ஷூட்டிங் துவங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா லாக் டவுன் காரணமாக அது துவங்கவில்லை. இதனால் அறிவித்தது போல இந்த வருடம் தீபாவளி ரிலீஸாகுமா என்பதும் சந்தேகம் தான்.