மெர்சலை தொடர்ந்து அட்லீயின் அடுத்தப்படம், வெளிவந்த உண்மை தகவல்

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் பிரமாண்டமாக வெளிவந்த படம் மெர்சல். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை நீங்களே கன்கூட பார்த்திருப்பீர்கள்.

இப்படம் உலகம் முழுவதும் 250 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியது, இதை தொடர்ந்து அட்லீயின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது.

இந்த நிலையில் அட்லீக்கு தென்னிந்தியாவில் பல நடிகர்கள் தங்கள் அடுத்தப்படத்தை இயக்க சொல்லி வற்புறுத்தி வருகின்றாரகளாம்.

ஆனால், அட்லீ நிதானமாக தான் இருந்து வருகின்றார், அவர் அடுத்து யாருடன் இணைவார் என்று பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி அட்லீ அடுத்து ஒரு தெலுங்குப்படத்தை தான் இயக்க போகின்றாராம், அந்த படத்தை பற்றிய தகவல் விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன், பவன் கல்யான் ஆகியோர் பெயர்கள் அடிப்படுவதாக தெரிகின்றது.