அட்லீயின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான்

அட்லீ தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற வரிசைக்கு வந்துவிட்டார், முதல் மூன்று படங்களை ஹிட் கொடுத்து ஹாட்ரிக் அடித்து விட்டார்.

அதிலும் ராஜா ராணி 50 கோடி, தெறி 150 கோடி, மெர்சல் 250 கோடி என தன் கிராபை மெல்ல உயர்த்தி வந்தார், தற்போது பலரின் எதிர்ப்பார்ப்பும் இவரின் அடுத்தப்படம் என்ன என்பது தான்.

அட்லீ தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் அடுத்து யாருடன் கைக்கோர்ப்பார் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நேற்று நம் தளத்திலேயே அட்லீ அடுத்து இயக்கவுள்ளது ஒரு தெலுங்குப்படம் தான் என்று தெரிவித்து இருந்தோம்.

இதை தொடர்ந்து அந்த தெலுங்கு நடிகர் யார் என்பது தான் பலரின் கேள்வியும், பிரபாஸுடன் தான் அட்லீ இணைவார் என்று முன்பு கூறப்பட்டது.

தற்போது இந்த லிஸ்டில் அல்லு அர்ஜுனும் இணைந்துள்ளார், அவரும் அட்லீயுடன் சேர்ந்து வேலைப்பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.