அட்லீயின் அடுத்தப்படம் இது தான், வந்தது மிரட்டல் அப்டேட்

அட்லீ தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். நேற்று இவர் திருப்பதி சென்றுள்ளார். அங்கு இவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

அதில் ஒரு பத்திரிகையாளர் ‘விஜய், அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா?’ என்று கேட்க, அதற்கு அட்லீயும் ‘ஆம்’ என்றுள்ளார்.

மேலும், ‘என் அடுத்தப்படம் பலரும் தெலுங்குப்படம் என்கிறார்கள், கண்டிப்பாக தெலுங்குப்படம் எடுப்பேன்.

ஆனால், அடுத்து நான் இயக்கவிருப்பது தமிழ் படம் தான், அதற்கடுத்து தான் தெலுங்குப்படம்’ என தெரிவித்துள்ளார்.