விண்ணை முட்டும் வசூல் சாதனை, இத்தனை கோடிகளை அள்ளியதா Avengers: Infinity War

Avengers: Infinity War தான் இந்தியாவின் எங்கு திரும்பினாலும் கேட்கும் பெயர், அந்த அளவிற்கு சந்து பொந்து வரை இப்படம் பிரபலம்.

இந்த நிலையில் இப்படம் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்து வருகின்றது.

அதிலும் இந்தியாவிலேயே இரண்டு நாட்கள் முடிவில் ரூ 63 கோடி வரை இப்படம் வசூல் செய்துவிட்டது, வேறு எந்த ஹாலிவுட் படமும் இத்தகைய வரவேற்பை பெறவில்லை.

இதில் தமிழகத்தில் இப்படம் ரூ 6.5 கோடி வரையிலும் வசூல் செய்துள்ளது, மேலும், உலகம் முழுவதும் Avengers: Infinity War ரூ 1500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.