பீஸ்ட் சென்சார் முடிந்தது.. ரிசல்ட் இதோ! படம் இத்தனை மணி நேரம் ஓடுமா?

தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை எதிர்பார்த்து தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் சென்சார் பணிகள் முடிந்தால் தான் ரிலீஸ் தேதி அறிவிப்பாகும்.

அதனால் சென்சார் ரிசல்ட்டுக்காக விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் சென்சார் முடிவு வெளியாகி இருக்கிறது. படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.

பீஸ்ட் படம் மொத்தம் 155 நிமிடங்கள் ஓடும். அதாவது 2 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்கள் படம் இருக்கும் எனவும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.