அவதார் பட சாதனையை முறியடித்த ப்ளாக் பேந்தர்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவந்து இன்று வரை வசூலில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் படம் அவதார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ஒட்டு மொத்த உலகமே காத்திருக்கின்றது, இந்த படம் உலகம் முழுவதும் 2 ஆயிரம் மில்லியனுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ப்ளாக் பேந்தர், இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை 1.2 ஆயிரம் மில்லியனுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இந்தியாவில் மட்டுமே ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் 2009ம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் ஒரு முக்கிய சாதனையை ப்ளாக் பேந்த சமன் செய்துள்ளது. 5 வாரங்களாக தொடர்ந்து பிளாக் பாந்தர் வசூலில் முதலிடத்தில் இருப்பது தான் அந்த சாதனை.

அவதார் படத்திற்குமுன் 1999ல் வெளியான The Sixth Sense என்ற படம் தான் இந்த சாதனையை படைத்திருந்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு ஒரு படம் மட்டுமே இந்த சாதனையை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.