விஜய்யை அசிங்கப்படுத்திய ப்ரிட்டன் விருது

தளபதி விஜய் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர், அவர்கள் எல்லோரும் விஜய்யை திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஏனெனில் ரஜினிக்கு பிறகு விஜய்க்கு தான் அதிக ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது, குடும்பத்துடன் பலரும் வந்து இவருடைய படத்தை பார்த்து செல்கின்றனர்.

விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார், இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இப்படம் ஸ்ட்ரைக்கையும் மீறி ஷுட்டிங் நடந்தது எல்லோருக்கும் தெரியும், இப்படக்குழு விரைவில் கொல்கத்த பறக்கவுள்ளது.

இந்த நிலையில் மெர்சல் படம் சிறந்த வெளிநாட்டு படம் பிரிவில் பிரிட்டனின் தேசிய விருதை வென்றுள்ளது.

அதே நேரத்தில் விஜய்யை சிறந்த துணை நடிகர் பிரிவில் நாமினி செய்துள்ளனர், மெர்சல் படத்தின் நாயகனே விஜய் தான்.

அப்படியிருக்க அவரை துணை நடிகர் பிரிவில் நாமினி செய்தது அவரை அசிங்கப்படுத்தும் நோக்கமா என்று விஜய் ரசிகர்கள் செம்ம கோபத்தில் உள்ளனர்.