விசுவாசம் தீம் மியூஸிக் சும்மா தெறிக்கும்- டி.இமான் சிறப்பு பேட்டி

டி.இமான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவருடைய பாடல்கள் என்றாலே எப்படியும் ஹிட் ஆகிவிடும், விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருக்கும் இவர் இசையமைத்துவிட்டார்.

அதனாலேயே வருடத்திற்கு குறைந்தது அரை படங்களாவது இவர் இசையமைத்துவிடுவார், இவருக்கு இந்த வருடம் செம்மயாக தொடங்கியுள்ளது.

டிக்டிக்டிக் என்ற முதல் ஸ்பேஸ் படத்திற்கு இசையமைத்த இவர் அடுத்ததாக தல அஜித்துடன் விசுவாசம் படத்தில் கைக்கோர்த்துள்ளார்.

எல்லோருக்குமே தெரியும் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் என்று, இப்படத்தின் ஆல்பம் குறித்து இமான் சமீபத்தில் பதில் அளித்துள்ளார்.

நான் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இசையமைக்க எப்போதும் விரும்புவேன், விசுவாசம் படமும் அப்படி தான்.

நீண்ட நாட்களாக அஜித் சாருடன் பணியாற்ற காத்திருந்தேன், இது எனக்கு நல்ல வாய்ப்பு, கண்டிப்பாக மாஸ் பாடல்கள் இருக்கும், அதே நேரத்தில் என் ஸ்டைலில் மெலடி பாடல்களும் இருக்கும்.

மேலும், தல படம்னாலே தீம் மியூஸிக் இல்லாமல் இருக்காது, அதேபோல் இதில் தீம் தெறிக்கும், இது மட்டுமின்றி பலரும் அஜித் சார் சொந்தகுரலில் பாடுவாரா என்று கேட்கின்றனர், அவர் இதுவரை பாடியது இல்லை, நான் முயற்சி செய்வேன், அவர் விருப்பம் தான் கடையில் என்று கூறியுள்ளார்.