விக்ரம் மகன் துருவ்விற்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்

நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் பாலா இயக்கிவரும் வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார்.

தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். ஷூட்டிங் ஏற்கனவே நேபாளத்தில் துவங்கி நடந்துவருகிறது.

இந்நிலையில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை கவுதமியின் மகள் சுப்புலக்ஷ்மி நடிக்கவுள்ளார் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.