தியா படம் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?

விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்துள்ள தியா படத்திற்க்கு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கருவில் இருக்கும் போதே அழிக்கப்படும் ஒரு குழந்தை எப்படி தன்னை அழித்தவர்களை பல்விழங்குகிறது என்பது தான் கதை.

இந்நிலையில் தியா படம் ‘தி அன்பார்ன்’ என்ற ஹாலிவுட் படத்தின் காபி என விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் இதே கதையுடன் தாய்லாந்தில் ‘தி அன்பார்ன் சைல்ட்’ என்ற பெயரில் படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஹாலிவுட், கொரியன் படங்களை காபி அடித்து வந்த தமிழ் சினிமா இயக்குனர்கள் தற்போது மற்ற நாட்டு படங்களையும் மிஸ் செய்யாமல் காபி அடிக்க துவங்கியிருப்பது வருத்தமளிப்பதாக சினிமா விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.