2.0 படத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல்

400 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் பட ம் 2.0 . ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் லீட் ரோலில் நடிக்கின்றனர்.

படம் சென்ற வருட தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது, பின்னர் இரண்டு முறை தள்ளிப்போய் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் VFX காட்சிகள் முடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது 2.0 ரிலீஸ்.

இந்நிலையில் இந்த வருடம் படம் வெளியாக வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருட தொடக்கத்தில் பொங்கல் திருவிழாவிற்கு படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.