விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி 2 தானா? முக்கிய பிரபலம் வெளியிட்ட ஹின்ட்

விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார். போஸ்டர் ப்ரோடக்ஷன் பணிகள்நடந்து வந்த நிலையில் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்த நிலையில் புதிய தேதி குறிப்பிடாமல் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அடுத்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது.

இந்த படம் துப்பாக்கி இரண்டாம் பாகம் தான் என தற்போது செய்தி பரவி வருகிறது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் சில துப்பாக்கி பட போட்டோக்களை பதிவிட்டிருந்தது தான் இந்த செய்தி பரவ காரணம்.

அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் விஜய்-முருகதாஸ் இணையும் அடுத்த படம் துப்பாக்கி 2வாக இருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும்.