காலா படத்தில் வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா? ரிலிஸிற்கு முன்பே லாபம் அதிர்ந்த திரையுலகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே திரையரங்குகளுக்கு திருவிழா தான், அதை விட அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு டபூள் சந்தோஷம் தான்.

அந்த வகையில் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா, இப்படத்தை அவருடைய மருமகன் மற்றும் பிரபல நடிகர் தனுஷ் தான் தயாரித்துள்ளார்.

காலா படம் அடுத்த மாதம் 27ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினி மட்டுமின்றி நானே பட்னெக்கரும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது காலா படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

75 கோடி பட்ஜெட்டில் உருவான காலா படத்தை லைகா நிறுவனம் 125 கோடி ருபாய்க்கு வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் நடித்துள்ள மற்றொரு படமான 2.0 வை தயாரித்துள்ளதும் லைகா நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.