எப்பவுவே தலைவர் மட்டும் தான் சூப்பர் ஸ்டார், நிரூபித்த காலா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக வரவுள்ள படம் காலா. இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்த படத்தை தொடர்ந்து தலைவர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் காலா படத்தின் சிங்கிள் ட்ராக் மே 1-ம் தேதி வெளிவந்தது. ‘செம்ம வெயிட்டு, இந்த காலா சேட்டு’ என்ற வரிகள் ரசிகர்களிடம் செம்ம ரீச் ஆகியுள்ளது.

இப்பாடல் வெளிவந்து 2 நாட்கள் ஆகிய நிலையில் அதற்குள் 2 மில்லியன் பேர் இப்பாடலை யு-டியூபில் கேட்டு ரசித்துள்ளனர்.

ரஜினியின் படம், பாடல்களுக்கு எப்போதுமே இணையத்தில் ரீச் இருக்கும் என்பதற்கு மீண்டும் இது ஒரு சான்று.