காலா படத்தின் பாடல்கள் பட்டையை கிளப்பியதா, ஒரு சிறப்பு விமர்சனம்

Rajinikanth in Kaala

கபாலியை விட காலாவின் அதிக புரட்சி இப்படத்தில் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர், அதற்கு ஏற்றார் போலவே படத்தில் 9 பாடல்கள் இருக்க, இதில் பாதி பாடல்களுக்கு மேல் வரிகளில் புரட்சி வெடிக்கின்றது.

ஏற்கனவே வந்த செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு பாடலிலேயே பல புரட்சிகரமான வரிகள் இடம்பெற்றது, அந்த பாடல் வரிகள் நன்றாக இருந்தாலும் ரசிகர்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.

ஆனால், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்தது போல் ‘நிக்கல் நிக்கல்’ என்ற பாடல், அதிகார வர்க்கத்தை ஓட சொல்லி ‘கிளம்புடா’ என்ற வரிகள் சும்ம தெறிக்கின்றது.

தங்க சீலை, கண்ணம்மா சந்தோஷ் நாரயணன் படத்திற்கே உரிய மெலடி டச், ஆனால், மாயநதி பாடலை ரீமிக்ஸ் செய்தது போல் உள்ளது சார், கொஞ்சம் டியூனை மாற்றுங்கள்.

போராடுவோம் பாடலின் டைட்டிலே அப்படியிருக்க, பாடல் வரிகள் எப்படியிருக்கும் என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, கண்டிப்பாக மாண்டேஜ் சாங் தான்.

அதே வரிசையில் தான் உரிமை மீட்போம், கற்றவை பற்றவை பாடலும், அதிலும் கற்றவை பற்றவை ஏற்கனவே நாம் டீசரில் கேட்ட பாடல் தான், யோகிபி குரலில் எளிதில் ரீச் ஆகும் பாடல், ‘ஒத்த தல ராவணா பத்து தல ஆகுடா’ என்ற வரியிலேயே புரிந்திருக்கும் ரஞ்சித் என்ன சொல்ல வருகின்றார் என்று.

தெருவிளக்கு வெளிச்சத்தில் பாடல் மெட்ராஸ் ஓப்பனிங் சாங் போலவே உள்ளது, அடித்தட்டு மக்களின் குடிசை சந்தோஷம், ஹிப்ஹாப், ஓவியம் என அவர்களின் அழகான வாழ்க்கை வரலாற்றை கூறியுள்ளது.

மொத்தத்தில் காலா பட ஆல்பம் என்பதை தாண்டி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அப்படியே பாடலாக்கியுள்ளார் ரஞ்சித்.