காலா டிரெய்லர் 12 மணி நேரத்திற்கு முன்பே செய்த சாதனை!

ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படம் காலா. இதில் ரஜினி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள டானாக நடித்துள்ளார்.

தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.

வெளியாகி 12 மணி நேரத்திற்கு முன்பே காலா டிரெய்லர் 2 மில்லியன் வியூஸ் என்ற சாதனையை படைத்தது. மேலும் அது ட்ரெண்டிங்கிலும் முதல் இடத்தில் உள்ளது.

தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான ட்ரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

டிரைலரை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்