கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு-த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2010ல் வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இளைஞர்களை வெகுவாக கவர்ந்த படம் அது.
அதன் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியில் சில வருடங்களுக்கு முன்பே இறங்கினார் கவுதம் மேனன். மாதவன் அந்த படத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு சிம்புவையே அதில் நடிக்க வைக்க பேசி வருவதாக சில வருடங்கள் முன்பு கவுதம் கூறியிருந்தார். ஆனாலும் தற்போது வரை படம் உறுதியாகவில்லை.
இந்நிலையில் தற்போது கொரோனா லாக்டவுனில் த்ரிஷாவை வைத்து கவுதம் மேனன் வீட்டில் இருந்தே வீடியோ கால் மூலமாக ஒரு குறும்படம் இயக்கியுள்ளார்.
‘கார்த்திக் டயல் செய்த எண்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த குறும் படத்தின் டீஸர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் ஜெஸ்ஸி (த்ரிஷா) இயக்குனரான கார்திக்கிற்கு போனில் பேசி ஊக்கம் கொடுப்பது போல வசனம் உள்ளது.
அந்த டீஸர் இதோ..