ரஜினி ரசிகர்களுக்கு தடை விதித்த கார்த்திக் சுப்புராஜ்

Karthik Subbaraj with actor Superstar Rajinikanth

காலா படம் வெளியான அன்றே ரஜினிகாந்த் தன் அடுத்த படத்தில் நடிக்க துவங்கிவிட்டார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது டார்ஜிலிங்கில் நடந்துவருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு நடக்கும் இடங்களை படக்குழு மிகவும் ரகசியமாக வைத்துள்ளதாம். மேலும் ரசிகர்கள் படப்பிடிப்பை பார்க்க அனுமதி அளிக்கப்படுவதில்லையாம். அடையாள அட்டை வைத்துள்ள படக்குழு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

கபாலி, காலா உள்ளிட்ட படங்கள் ஷூட்டிங்கின் போது சிலர் செல்போனில் பதிவு செய்து ரஜினியின் லுக் மற்றவர்களுக்கும் தெரியும்படி செய்துவிட்டனர். அதனால் எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது.
அதை தடுக்கவே இப்படி ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.