சிவகார்த்திகேயன் அடுத்தப்படத்தின் முன்னணி ஹீரோயின்

சிவகார்த்திகேயன் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார்.

முதன் முறையாக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கவுள்ளார், இப்படம் ஒரு சயின்ஸ் பிக்சன் படம் என கூறப்படுகின்றது.

இந்த படத்தை முடித்துவிட்டு ஸ்டுடியோ க்ரீன் ராஜேஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறுகின்றனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க முதலில் சாய் பல்லவியிடம் தான் பேச்சு வார்த்தை நடந்தது.

ஆனால், அவரின் கால்ஷிட் குழப்பத்தால் தற்போது அவர் நடிக்கவில்லை, அவருக்கு பதிலாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நயன்தாரா நடித்திருந்தாலும், அதில் இவருக்கான கதாபாத்திரம் மிக குறைவு.

அதனால், ராஜேஸ் இயக்கும் இந்த காதல்-காமெடி படத்தில் நயன்தாரா அதில் விட்டதை இதில் பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.