காலா அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் அதை தொடர்ந்து ரஜினியின் 2.0 படமும் சுதந்திர தினத்தன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து ரஜினி சன் பிசிசர்ஸ் தயாரிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்ய கார்த்திக் சுப்புராஜ் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்துவருகிறதாம்.