ரூ 1000 கோடியில் உருவாகும் தமிழ் படம், பிரமாண்ட ப்ளான், இயக்குனர் யார் தெரியுமா?

பாகுபலி படம் 350 கோடியில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், அடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் எவ்வளவாக இருக்கும் என ஒரு கேள்வி எழுந்தது.

இதன் மொத்த பட்ஜெட் 1000 கோடி ருபாய் என கூறப்படுகிறது. இதனால் தான் லைகா நிறுவனம் பின்வாங்கிவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

மேலும் தற்போது ஜியோ ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

தயாரிப்பாளர் உறுதியானால் படம் பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.