உலகளவில் மெர்சலுக்கு கிடைத்த மிகப்பெரும் விருது, ரசிகர்கள் கொண்டாட்டம்

மெர்சல் படம் தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்தது, இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை பற்றி பல சர்ச்சைகள் எழுந்தது, முதலில் இப்படம் வெற்றியா தோல்வியா என்றே பெரும் சலசலப்பு எழுந்து அனைந்தது.

ஆனால் இந்த படம் ரூ 250 கோடி வரை வசூல் செய்து அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் லாபம் தன கொடுத்துள்ளது.

அதே நேரம் தயாரிப்பாளர்களுக்கு இப்படம் நஷ்டம் என்று சொன்னாலும், இல்லை எங்களுக்கு லாபம் தான் என படக்குழுவே கூறிவிட்டது.

இந்நிலையில் இந்த படம் ‘சிறந்த வெளிநாட்டு படம்’ பிரிவில் பிரிட்டனின் தேசிய விருதை வென்றுள்ளது. பல நாட்டின் திரைப்படங்கள் போட்டியில் இருந்தாலும் இறுதியில் மெர்சல் படத்திற்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இதற்காக மெர்சல் படக்குழு மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.