தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள், மெர்சலுக்கு கிடைத்த கௌரவம்

சினிமா என்றாலே வியாபாரம் தான், இதில் எந்த நடிகர்கள் படங்கள் அதிக லாபம் தருகின்றதோ அவர்கள் படங்கள் அதிகமாக வியாபாரம் ஆகும்.

அந்த வகையில் சல்மான், அமீர், ஷாருக் என வட இந்தியாவை பல கான் நடிகர்கள் ஆண்டாலும், தென்னிந்திய படங்களுக்கு உலகம் முழுவதும் கிடைக்கும் வரவேற்பு எப்போது வேற லெவல் தான்.

அந்த வகையில் சீனாவை தவிர்த்து பார்த்தால் தங்கல் வெறும் 700 கோடி தான் வசூல்.

தென்னிந்திய சினிமாவை பொறுத்த வரை தற்போதெல்லாம் பாலிவுட் படங்களுக்கு செம்ம போட்டி கொடுக்கின்றது. அந்த வகையில் பாகுபலி சீரியஸ் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் எது என்பதன் லிஸ்ட் இதோ…

  1. பாகுபலி2- ரூ 1750 கோடி
  2. பாகுபலி- ரூ 650 கோடி
  3. கபாலி- ரூ 289 கோடி
  4. எந்திரன்- ரூ 286 கோடி
  5. மெர்சல்- ரூ 254 கோடி

இதில் பாகுபலி, கபாலி, எந்திரன் ஆகிய படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரிலிஸ் ஆனது, மெர்சல் தமிழ், தெலுங்கில் மட்டும் ரிலிஸ் ஆனது.

இதில் பாகுபலி-2 மலையாளத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.