மெர்சல் மிகப்பெரும் தோல்வி அவர்களுக்கு மட்டும் தான், வெளிவந்த தகவல்

தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா என மொத்த இந்தியாவையும் அதிர வைத்தது, அதே போல் வெளிநாடுகளில் மெர்சல் அதிரடி வசூல் தான்.

அதில் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்காவில் மெர்சல் வசூல் வேட்டை தான்.

பல இடங்களில் ரஜினி படத்தின் வசூலையே ஓரங்கட்டியது, அப்படியிருக்க இன்னும் ஒரு சில மெர்சல் படம் தோல்வி என்று தான் கூறி வருகின்றனர்.

இதில் குறிப்பாக மெர்சல் விநியோகஸ்தர்களுக்கு லாபம், ஆனால், தயாரிப்பாளர்களுக்கு படம் நஷ்டம் தான் என அடித்து கூறுகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் திருப்பூர் சுப்ரமணியம் மெர்சல் படம் வாங்கிய விலையை விட மூன்று மடங்கு லாபம் என்றார்.

ஆனால், தற்போது அவரே தயாரிப்பாளருக்கு பட்ஜெட் அதிகமானதால் படம் நஷ்டமாகியிருக்கும் என்று கூறியது போல் ஒரு வீடியோ உலா வருகின்றது, இது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.