மெர்சல் இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சி தகவல்

மெர்சல் படம் கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம், இந்த படம் நஷ்டம் என்றால் நம்பவா முடிகின்றது ஆனால் இது ஓரளவிற்கு உண்மையும் கூட.

விநியோகஸ்தர்களுக்கு மெர்சல் அளவிற்கு பெரிய லாபம் கொடுத்த படம் வேறு ஏதும் சமீபத்தில் இல்லை என்று கூறப்படுகின்றது.

ஆனால், இப்படம் தயாரிப்பாளர்களுக்கு லாபமா என்றால் கேள்விக்குறி தான், நாம் முன்பே சொன்னது போல் ரூ 90 கோடிக்கு எடுக்க வேண்டிய படத்தை அட்லீ ரூ 130 கோடிகளுக்கு மேல் கொண்டு சென்று விட்டதாக பல தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் மூலம் எப்படியும் தயாரிப்பாளருக்கு ரூ 15லிருந்து 20 கோடி வரை மெர்சல் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கும் என தெரிகின்றது.

ஆனால், தேனாண்டாள் மெர்சல் எங்களுக்கு மெகா ஹிட் என்று கூறிவிட்டனர், அப்படியிருக்க தொடர்ந்து இப்படி மெர்சல் நஷ்டம் தகவல் வருவது பலருக்கும் பல விதமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து தற்போது வரை மெர்சல் லாபாமா நஷ்டமா என்றா கணக்கு தொடர்ந்து ஒரு பெரிய பஞ்சாயத்து நடந்து தான் வருகின்றது.

அதிகாரப்பூர்வ வசூலை தயாரிப்பு நிறுவனமே வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே உண்டு.