சூர்யாவின் அடுத்த படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் – அதிகாரபூர்வ அறிவிப்பு

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

அடுத்த அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகும் அறிவிப்பு வெளியானது. அந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இந்த படத்தில் சூர்யாவுடன் நடிப்பார் என்று இயக்குனர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

விஜய்யின் ஜில்லா படத்திற்கு பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்புகிறார் மோகன்லால்.