Mr லோக்கல் முதல் நாள் பிரம்மாண்ட வசூல்! மோசமான விமர்சனங்களை தாண்டி SK சாதனை

சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் நேற்று திரைக்கு வந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தினை மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

சிவகார்திகேயன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ரசிகர்கள் படத்தில் கதையே இல்லை, காமெடி சரியில்லை என கூறி தங்கள் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது முதல்நாள் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 6.28 கோடி ருபாய் வசூல் வந்துள்ளது என கூறப்படுகிறது.

மோசமான விமர்சனங்களை தாண்டி இது பெரிய சாதனைதான்.