சைக்கோ படத்தின் முதல் நாள் வசூல்.. மொத்தம் இத்தனை கோடியா?

மிஸ்கின் படங்களுக்கு என்று தனியாக ரசிகர் கூட்டம் உள்ளது. நேற்று வெளியான சைக்கோ படத்திற்கும் மிக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அடல்ட் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ள படம் என்பதாலும், இந்த படத்தில் கொடூரமான காட்சிகள் இருப்பதாலும் குழந்தைகள் மற்றும் இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என இயக்குனரே கேட்டுக்கொண்டார்.

நேற்று முதல் நாளில் சைக்கோ படம் சென்னையில் மட்டும் 44 லட்சம் வசூல் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் ரூ 2.3 கோடி வசூல் செய்துள்ளது.

உதயநிதி கேரியரில் இதுதான் அதிகபட்ச வசூல் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.