அஜித்திடம் ஓடி வந்து நன்றி சொன்ன நயன்தாரா

அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் தொடங்க, இதில் ஹீரோயினாக நயன்தாரா நடித்து வருகின்றார்.

நயன்தாரா தற்போது ஹீரோக்களுக்கு நிகராக வளர்ந்துவிட்டார், அவருக்கு நம் படத்தில் நல்ல கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என அஜித்தே சிவாவிடம் கட்டளையிட்டாராம்.

இதை கேள்விப்பட்ட நயன்தாரா சந்தோஷப்பட்டது மட்டுமின்றி, அஜித்தை சந்தித்து தன் நன்றியையும் கூறினாராம்.

இதை தொடர்ந்து அஜித் நயன்தாரா குறித்த காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றதாம்.