நயன்தாராவிற்கு அஜித் மீது இவ்வளவு மரியாதையா? விசுவாசம் புதிய அப்டேட்

தமிழ் சினிமாவின் நம்பர்-1 ஹீரோயின் நடிகை நயன்தாரா. தனியாக படங்கள் நடித்தாலும், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் சில படங்களில் நடிக்கிறார்.

தற்போது அவர் தல அஜித்தின் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக சிவா அவரை அணுகியதும் கதை கூட கேட்காமல் ஒப்புக்கொண்டாராம். அஜித் பெயரை கேட்டதும் சம்பளம் கூட பேசாமல் ஒப்புக்கொண்டுள்ளார்.

‘நான் பண்றேன். தேதி பிரச்னை இல்லை. மற்ற படங்களை அட்ஜெஸ்ட் பண்ணிட்டாவது இந்தப் படம் பண்ணுவேன்’ என்று கமிட் ஆனாராம். காரணம் அஜித் மீதான மரியாதை.