நேர்கொண்ட பார்வை 4 நாள் வசூல் முழு விவரம்

அஜித் எச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இது படம் அல்ல பாடம், இப்படி ஒரு கதையில் அஜித் போன்ற மாஸ் ஹீரோ நடிக்க ஒப்புக்கொண்டதை பாராட்ட வேண்டும் என பலரும் கூறிவருகின்றனர்.

இந்த படம் சென்னையில் முதல் நாளில் 1.58 கோடி வசூலித்து மெர்சல் பட சாதனையை முறியடித்தது. தற்போது நான்கு நாட்கள் முடிவிலும் அதே அளவு வசூல் தான் தினமும் வந்துகொண்டிருக்கிறது.

நேற்று மட்டும் சென்னையில் 1.42 கோடி ருபாய் வசூலித்துள்ளது இந்த படம். நான்கு நாள் சென்னை வசூல் விவரம் இதோ..

1st day: Rs 1.58 Cr

2nd day: Rs 1.17 Cr

3rd day: Rs 1.38 Cr

4th day: Rs 1.42 Cr