தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் விஜய், அஜித், அதிலும் விஜய் எல்லாம் ரஜினி படத்தை விட அதிகம் வசூலிக்கு இடத்திற்கு வந்துவிட்டார்.
இவரின் மெர்சல் படம் தமிழகத்தில் மட்டுமே 125 கோடி வரை வசூல் செய்தது, இதன் மூலம் ரஜினியின் எந்திரன் சாதனையை விஜய் முறியடித்தார்.
இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே தமிழகத்தில் குறைந்தது 400 அல்லது 450 திரையரங்குகள் வரை ரிலிஸ் ஆகும்.
இந்நிலையில் சமீபத்தில் கூடிய தயாரிப்பாளர் சங்க மீட்டிங்கில் பெரிய விவாதமே இதுக்குறித்து வெடித்தது. மிகவும் காரசாரமாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.
இதில் எல்லோரும் ஒரு மனதாக இனி ரஜினி, விஜய், அஜித் என யார் படம் வந்தாலும் 300 திரையரங்குகள் தான் கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனர்.
இதன் மூலம் இனி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறைய கூட வாய்ப்பு உள்ளது, இந்த முடிவு விஜய், அஜித் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் அஜித், விஜய் ரசிகர்கள் ஈகோவே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தான், யார் பெரிய ஆள் என்பதை பார்க்க, தற்போது அதுவும் இல்லையென்றால் என்ன சொல்வது பார்ப்போம்.