விக்ரமிற்கு பதிலாக சேது படத்தில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகர் தான்! சேது ரகசியங்கள்

சேது தமிழ் சினிமாவின் மைல் கல் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவையே திருப்பி போட்ட படம்.

இப்படத்தின் மூலம் விக்ரம் என்ற தலைச்சிறந்த நாயகன் நம் அனைவருக்கும் கிடைத்தார், அதேபோல் மிகச்சிறந்த இயக்குனர் பாலாவும் இப்படத்தின் மூலம் தான் நமக்கு கிடைத்தார்.

ஆனால், இப்படம் வருவதற்குள் எல்லோரும் படாத பாடு தான் பட்டார்கள், முதலில் சேது என்ற டைட்டிலே இல்லை.

பாலா இப்படத்தை அகிலன் என்ற பெயரில் தான் தொடங்கியுள்ளார். அந்த படத்தில் அப்போது ஹீரோவாக நடிக்கவிருந்தது முரளி தானாம்.

ஆனால், சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் அப்படம் தள்ளிக்கொண்டே போக, ஒரு கட்டத்தில் ட்ராப்பே ஆகிவிட்டதாம்.

அதே நேரத்தில் முரளி தன்னால் முடிந்த உதவியை பாலாவிற்கு செய்துக்கொண்டே இருந்துள்ளார், அந்த நன்றிக்கடனுக்காக தான் பாலா அதர்வாவை வைத்து பரதேசி படத்தை இயக்கியுள்ளார்.

மேலும், இதை தொடர்ந்து நடிகர் விக்னேஷை வைத்து சேது படத்தை பாலா தொடங்கவிருந்தாராம், அவரும் ஒரு சில பிரச்சனைகளால் அப்படத்தை விட்டு வெளியே போக, பிறகு தான் இப்படத்தில் விக்ரம் கமிட் ஆகியுள்ளார்.