சிம்புவுடன் இணையும் படத்தில் ஓவியாவுக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா? ரசிகர்கள் அதிர்ச்சி

Actress Oviya in 90 Ml

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் கிடைத்துள்ளது. அதனால் அவருக்கு படவாய்ப்புகளும் அதிகம் வருகிறது, இருப்பினும் அவர் ஒரு சில வாய்ப்புகளை மட்டுமே தேர்ந்தெடுத்து ஒப்புக்கொண்டுள்ளார்.

அடுத்து அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் 90ML என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கு சிம்பு தான் இசையமைப்பாளர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிம்பு-ஓவியா காதலிப்பதாகவும், திருமணம் கூட செய்துகொண்டதாகவும் வதந்திகள் இதற்குமுன் பரவியது உங்களுக்கு நினைவிருக்கும்.

90Ml படத்தில் ஓவியா லெஸ்பியன் எனப்படும் ஓரினசேர்கையாளராக நடிக்கிறார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் படக்குழுவோ இயக்குனரோ இதுபற்றி எந்த கருத்தும் அதிகாரபூர்வமாக இதுவரை தெரிவிக்கவில்லை.

Oviya starrer 90 Ml movie first look poster