ஆவேசமாக அரசியல் பேசும் விஜய்? தளபதி62 படத்தில் பிரம்மாண்ட கிளைமாக்ஸ் காட்சி

நடிகர் விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி62 படத்தில் நடித்து வருகிறார். கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட அரசியல் மாநாடு காட்சி சென்னையில் எக்கச்சக்கமான மக்களை வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இது கிளைமாக்ஸ் காட்சியாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில், மற்ற விஜய் படங்களை போல விஜய் ஆவேசமாக அரசியல் பேசும் வசனங்கள் இதில் இருக்குமாம்.

பழ.கருப்பையா மெயின் வில்லனாக நடிக்க, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோரும் நெகடிவ் வேடங்களில் நடிக்கின்றனர். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.