அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த வருடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் வந்த படம் விவேகம், இப்படத்தில் அஜித் தன் முழு உழைப்பையும் கொடுத்து நடித்தார்.
ரசிகர்கள் ஆசைக்காக உடம்பை இருக்கி சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் வைத்து நடித்தார், ஆனால் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையவில்லை.
இதனால் அவருடைய ரசிகர்களே கொஞ்சம் வருத்தத்தில் தான் இருந்தனர், இந்த தோல்விக்காக தான் அஜித் மீண்டும் சத்யஜோதி நிறுவத்திற்கு வாய்ப்பு கொடுத்தார்.
அப்படம் தான் விசுவாசம், இப்படம் மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது, ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்போதைய சினிமா நிலைமை குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, சினிமாவை கெடுப்பது இயக்குனர்கள் தான். அதற்கு உதாரணமாக, அஜித்தின் விவேகம் படத்தில் ஒரு கண்ராவியும் இல்லை. படத்தில் அஜித்தை 100 பேர் சுடுகின்றனர், அவருக்கு ஒன்னும் ஆகவில்லை. ஆனால் அவர் 100 பேரை சுடுகிறார் அனைவரும் இறக்கின்றனர். அதற்கு அவர்கள் செய்திருக்கும் செலவு அணியாயம் என்று பேசியுள்ளார்.